January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அவசரகால சட்டத்தை சவாலுக்கு உட்படுத்தி நீதிமன்றத்தில் மனு!

ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள அவசரகால ஒழுங்குவிதிகளை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அது தொடர்பான வர்த்தமானியை வலுவிழக்க செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளமையால், அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அவர் அந்த மனுவின் ஊடாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வழுவிழக்கச் செய்து உத்தரவிடுமாறு மனுதாரர் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த மனுவில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி சார்பில் சட்டமா அதிபர், முன்னாள் ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத், தற்போதைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.