திட்டமிட்ட சூழ்ச்சிகள் மூலமே கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக்கப்பட்டார் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் உண்மைகளை கூடிய விரைவில் மக்கள் புரிந்துகொள்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சி பிளவடைந்துள்ளதாக சிலர் கூறுகின்ற போதும், அவ்வாறு பிளவு ஏற்படவில்லை என்றும், சூழ்ச்சிக்காரர்களிடம் சிக்கிய குழுவொன்றே வெளியில் சென்றுள்ளது என்றும், ஆனால் அவர்கள் உண்மைகளை புரிந்துகொண்டு கூடிய விரைவில் மீண்டும் தங்களுடன் இணைந்துகொள்வார்கள் என்றும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன இன்னும் பலமிழக்கவில்லை என்றும், அடுத்த பொதுத் தேர்தலில் அதிக பலத்தை பெறுவது உறுதியானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே பொதுஜன பெரமுன செயலாளர் இதனை குறிப்பிட்டுள்ளார்.