தேசிய எரிபொருள் விநியோக அட்டையை ( QR முறை) பெற்றுக்கொள்வதற்காக பல வாகனங்களை கொண்டுள்ள வர்த்தக நிறுவனங்களும் பதிவுகளை மேற்கொள்ள முடியுமென்று எரிசக்தி அமைச்சர் அறிவித்துள்ளார்.
இதன்படி வர்த்தக நிறுவனங்கள் தமது வர்த்தக பதிவு எண்ணை அடிப்படையாகக் கொண்டு நிறுவனத்தின் வாகனங்களை பதிவு செய்து வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்ள முடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தனி வாகனங்களுக்கான பதிவுகளின் மூலம் 4,296,950 வாகனங்களுக்கு எரிபொருள் விநியோக அட்டைகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நேற்று முதல் நாடு முழுவதும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இந்த புதிய முறைமை செயற்படுத்தப்பட்டதாகவும், எதிர்வரும் முதலாம் திகதி முதல் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இந்த முறைமை செயற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.