November 18, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உண்டியல் முறையில் வெளிநாட்டு நாணயப் பரிமாற்றம்: ஒருவர் கைது!

உண்டியல் முறையில் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றத்தல் ஈடுபட்ட சந்தேக நபரொருவர் வெலிகம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையினர் நேற்று மாலை  மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவரிடமிருந்து ஒரு கோடியே அறுபத்தேழு இலட்சம் ரூபா பெறுமதியான டொலர் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்பொக்க பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும், இவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.