November 18, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அவசரகால சட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேறியது!

பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமுல்படுத்திய அவசரகால ஒழுங்குவிதிகள் பாராளுமன்றத்தில் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அவசரகால ஒழுங்குவிதிகளுக்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரம் ஜனாதிபதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நாடு முழுவதும் அவசரகால நிலையை பிரகடனம் செய்திருந்தார்.

இதனை தொடர்ந்து அதன் மீதான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்று, அதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது ஆளும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான உறுப்பினர்களும், எதிர்க்கட்சி வரிசையில் சுயாதீனமாக இயங்கும் வீரவன்ச அணியினரும் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் அதனை எதிர்த்து வாக்களித்தன.