தொடர்ந்தும் போராட்டங்களை நடத்தி நாட்டை சீர்குலைக்கும் முயற்சிகளை அனுமதிக்க முடியாது என்று தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று அவசரகால சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் ‘கோட்டா கோ ஹோம்’ என்று போராடியவர்கள் இப்போது ‘ரணில் கோ ஹோம்’ என்று போராடும் நிலையில் அடுத்ததாக ‘தினேஸ் கோ ஹோம்’ என்றும் போராடலாம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் போராட்டம் நடத்துபவர்கள் எவரும் இன்னும் யாரை நியமிக்க வேண்டும் என்று கூறவில்லை. இவ்வாறான போராட்டங்கள் நாட்டின் அபிவிருத்தியையே பாதிக்கும் என்பதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
இந்த நேரத்தில் போராட்டங்கள் நாட்டின் பொருளாதாரத்த கட்டியெழுப்புவதற்காக இருக்க வேண்டுமே தவிர நாட்டை சீர்குலைப்பதற்காக இருக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.