ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங்கிற்கும் இடையே இன்று சந்திப்பொன்று நடைபெற்றது.
கொழும்பில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது இருநாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இதன்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் தொடர்பிலும் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.