November 17, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரணிலுக்கு இன்று பலப் பரீட்சை: வெல்லுவாரா?

நாட்டில் அமைதி நிலையை ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஜனாதிபதியினால் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

இந்த வாக்கெடுப்பின் போது ரணில் விக்கிரம சிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்த போது அளிக்கப்பட்ட அதே எண்ணிக்கையிலான வாக்குகள் கிடைக்குமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பின் போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு 134 வாக்குகள் கிடைத்தன. எனினும் அவசரகால சட்டம் மீதான வாக்கெடுப்பு பகிரங்கமாக நடத்தப்படுவதால் அந்த 134 பேரும் வாக்களிப்பார்களா? என்ற சந்தேகங்கள் காணப்படுகின்றன.

இரகசிய வாக்கெடுப்பின் போது ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் சிலரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சிலரும் வாக்களித்திருந்ததாக அமைச்சர்கள் சிலர் கூறியிருந்தனர்.

இதேவேளை ரணிலுக்கான ஆதரவை பகிரங்கமாக அறிவிக்காது இருந்த வேறு சிறுபான்மை கட்சிகள் உள்ளிட்ட மற்றைய கட்சிகளை சேர்ந்த சிலரும் இரகசிய வாக்களிப்பில் ரணிலை ஆதரித்து வாக்களித்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றன.

அவர்கள் இன்று ரணிலின் அவசரகால சட்டத்தை ஆதரிப்பார்களா, என்று கேள்விகள் எழுந்துள்ளன.