January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரூபவாஹினிக்குள் நுழைந்த தனிஸ் அலி கைது!

ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தின் போது, ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்து, தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு இடையூறுகளை ஏற்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான தனிஸ் அலி கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்ல தயாராக இருந்த போது, நேற்று மாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை விமானத்திற்குள் வைத்து கைது செய்துள்ள பொலிஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த 13ஆம் திகதி கொழும்பில் ஜனாதிபதிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, குழுவொன்று ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை முற்றுகையிட்டது.

இவ்வேளையில் தனிஸ் உள்ளிட்ட குழுவினர் உள்ளே சென்று ஊழியர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார், குறித்த சந்தேக நபரை நேற்று கைது செய்துள்ளனர்.