January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு இந்தியப் பிரதமர் வாழ்த்து!

File Photo

இலங்கையின் புதிய ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கடிதமொன்றை அனுப்பி இந்தியப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வாழ்த்தியுள்ளதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அந்தக் கடிதத்தில் இலங்கையின் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சிக்கு இந்தியாவின் ஆதரவை பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், மக்களின் பரஸ்பர நன்மைக்காகவும், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நெருங்கிய நட்புறவை வலுப்படுத்துவதற்காகவும் ஜனாதிபதியுடன் நெருக்கமாகச் செயற்பட எதிர்பார்த்துள்ளதாகவும் இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.