January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”அரசாங்கத்தில் இணைய மாட்டோம்”: ஏகமனதாக தீர்மானம்!

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பாராளுமன்றக் குழுக்கூட்டம் மற்றும் செயற்குழுக் கூட்டம் என்பன இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கூடியது.

இதன்போது அங்கு சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அவை நிறைவேற்றப்பட்டன.

இதன்படி கருத்துத் தெரிவிக்கும் உரிமை, போராட்டம் நடத்துவதற்கான உரிமை மற்றும் மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தும் உரிமைகளை ஒடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட அவசரகாலச் சட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் மக்கள் பிரச்சினைகளுக்கு உண்மையான தீர்வுகளை வழங்காமல் அரச பயங்கரவாதத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டவிழ்த்துவிடும் அடக்குமுறை அரசாங்கத்துடன் கூட்டுச் சேராதிருப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை பாராளுமன்ற ஜனநாயக அமைப்பில் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக பாராளுமன்றத்தில் குழு முறைமையொன்று ஸ்தாபிக்கப்பட்டால், அதற்கு ஆதரவளிப்போம் என்றும் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.