May 23, 2025 23:02:29

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய உயர்ஸ்தானிகர் பிரதமர் தினேஷை சந்தித்தார்!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிரதமர் தினேஷ் குணவர்தனவை இன்று சந்தித்தார்.
கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இவ்வேளையில் முதலீடு மற்றும் சுற்றுலாத் துறையின் அபிவிருத்திகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன், நாட்டில் புதுப்பிக்கத்தக்க மின்சக்தித்துறை மற்றும் ரயில் உட்பட போக்குவரத்து அமைப்பின் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை இலங்கைக்கு வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.