February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழகத்தில் இருந்து மேலும் ஒருதொகை நிவாரணப் பொருட்கள்!

தமிழக அரசாங்கத்தினால் மேலும் ஒருதொகை நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

3.4 பில்லியன் இலங்கை ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பொருட்கள் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்தப் பொருட்கள் இந்திய உயர்ஸ்தானிகரினால் இன்றைய தினம் இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது.

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் அதனை பொறுப்பேற்றுக்கொண்டனர்.