December 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட்: 4 ஆவது தடுப்பூசி வழங்க தீர்மானம்!

vaccination New Image

இலங்கையில் கொவிட் வைரஸ் தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் மக்கள் ஒன்றுகூடும் இடங்களில் முகக் கவசம் அணிவதை மீண்டும் நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு ஆராய்ந்து வருகின்றது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டிற்காக நான்காவது தடுப்பூசியையும் வழங்குவதற்கு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இது தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதன்போது தடுப்பூசி விடயம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.