எரிபொருள் விநியோகம் தொடர்பில் புதிய முறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு எரிசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி ஆட்டோ சாரதிகளை தமது பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்போது எரிபொருள் பெறுவதற்கான ஒரு நிரப்பு நிலையமொன்றை ஒதுக்கிக்கொள்ளுமாறும் அதன் அடிப்படையிலேயே எரிபொருள் விநியோகம் நடக்கும் என்றும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்னர் இதற்கான பதிவினை மேற்கொள்ளுமாறும், முதலாம் திகதி முதல் பதிவு செய்த ஆட்டோக்களுக்கு மட்டுமே எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விவசாய உபகரணங்கள், மின்பிறப்பாக்கிகள் மற்றும் ஏனைய உபகரணங்களை பயன்படுத்துபவர்கள் அந்தந்த பிரதேச செயலகங்களில் பதிவு செய்து எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.