எரிபொருளை இறக்குமதி செய்வதில் தொடர்ந்தும் நெருக்கடியை எதிர்நோக்குவதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அந்நிய செலாவணி பற்றாக்குறையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அடுத்த 12 மாதங்களுக்கு பெட்ரோல், டீசல் இறக்குமதியை மட்டுப்படுத்த வேண்டியிருக்கும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதனால் தினசரி எரிபொருள் தேவையை முறையாக முகாமைத்துவம் செய்யும் நோக்கத்திலேயே நாடு முழுவதும் QR முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.