January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

போராட்டக் கள செயற்பாட்டாளர்கள் ஐவருக்கு வெளிநாட்டு பயணத் தடை!

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் வசந்த முதலிகே, ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட கொழும்பு காலிமுகத்திடல் போராட்டக்கள செயற்பாட்டாளர்கள் ஐவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் பொலிஸ் தலைமையகத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்ட வழக்கு விசாரணையின் போதே இவர்களுக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றவிசாரணை பிரிவினர் நீதிமன்றத்திற்கு விடுத்த கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதற்கமைய வசந்த முதலிகே, ஜோசப் ஸ்டாலின், எரங்க குணசேகர, அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் மற்றும் லகிரு வீரசேகர ஆகியோருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.