January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரணிலை வாழ்த்திய ரஷ்ய ஜனாதிபதி புட்டின்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று காலை கொழும்பில் ரஷ்ய தூதுவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த போது, புட்டினின் வாழ்த்துச் செய்தியை கையளித்துள்ளார்.

குறித்த வாழ்த்துக் கடிதத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ரஷ்ய ஜனாதிபதி, இலங்கை ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளும் எப்பொழுதும் நட்புறவுடனேயே இருக்கின்றன என்றும், பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கு விரும்புவதாகவும் புட்டின், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.