January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

QR முறைமை அமுலாகும் தினம் தொடர்பில் அறிவித்தல்!

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் புதிய முறையில் எரிபொருளை விநியோகிக்கும் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை (QR ) ஜுலை 26 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் அமுலாகும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் முழுமையாக இது செயற்படுத்தப்படும் என்றும், அதுவரையில் நாளை முதல் இறுதி இலக்க அடிப்படையில் இந்த முறைமை செயற்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஆகஸ்ட் முதலாம் திகதிக்கு பின்னர் எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை மாத்திரமே அமுலில் இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இன்று முதல் அந்த முறைமையை செயற்படுத்தத் திட்டமிட்டிருந்த போதும், சில காரணங்களால் அது நாளை வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.