January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காணாமல் போன துப்பாக்கி தியவன்னா ஓயாவில் இருந்து மீட்பு!

பாராளுமன்றம் அருகே பொல்துவ சந்தியில் பாதுகாப்புத் தரப்பினருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே இடம்பெற்ற மோதலின் போது பாதுகாப்பு படையினரிடம் இருந்து காணாமல் போயிருந்ததாக கூறப்படும் துப்பாக்கியொன்று தியவன்னா ஓயாவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 13 ஆம் திகதி பாதுகாப்பு படையினரிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள் ஆர்ப்பாட்டக்காரர்களினால் அபகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

அந்தத் துப்பாக்கிகளில் ஒன்று தியவன்னா ஓயாவில் இருந்து இன்று காலை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இதன்போது காணாமல் போனதாக கூறப்படும் மற்றுமொரு துப்பாக்கி தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.