இலங்கையில் மீண்டும் கொரோன தொற்றுப் பரவல் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர்.
கடந்த மாதங்களாக நாட்டில் கொவிட் தொற்றுப் பரவல் குறைவடைந்திருந்த போதும், தற்போது அந்தப் பரவல் அதிகரிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கொவிட் மரண வீதமும் அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீண்டும் நாட்டில் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் என்பனவற்றை கட்டாயப்படுத்த வேண்டும் என்று அரச மருத்துவர்கள் சுகாதார அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளனர்.