ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்துள்ள கட்சிகள் சில அதிலிருந்து வெளியேற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக அவர்கள் அரசாங்கத்துடன் இணைந்துகொள்வதற்கு அந்தக் கட்சிகள் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுக்கள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்கும் அதேவேளை, இன்னுமொரு பக்கத்தில் கட்சித் தாவல்கள் தொடர்பான கலந்துரையாடல்கள் நடப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் ஐதேக எம்.பிக்கள் சிலரும் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சர்வகட்சி அரசாங்கம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் கலந்துரையாடல்களின் போது சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமிப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது தினேஸ் குணவர்தன பிரதமராக பதவி வகிக்கும் நிலையில், அவர் பதவியில் இருந்து விலகினால் மாத்திரமே சஜித் பிரதமராவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.