January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

QR முறையில் எரிபொருள் விநியோகம் ஒத்திவைப்பு!

இலங்கை முழுவதும் இன்று முதல் அமுல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த எரிபொருள் விநியோக அட்டை முறை (QR முறை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தற்போது அது பரிசோதனை மட்டத்தில் இருப்பதாகவும், அந்த பரிசோதனைகள் முடிவடைந்த பின்னர் அதனை நாடு முழுவதும் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய முறைமைக்காக 40 இலட்சம் வரையிலான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை அமுல்படுத்தி வரிசைகளை குறைத்து எரிபொருள் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வர எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

கடந்த தினங்களாக இது சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பரிசோதிக்கப்பட்டது. இது வெற்றியளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து விரைவில் நாடு முழுவதும் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.