January 21, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வீட்டில் இருந்து பணியாற்றும் அரச ஊழியர்களுக்கான அறிவித்தல்!

அரச ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்றும் காலத்தை மேலும் நீடிப்பதற்கு பொதுநிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலைமையால் அரச ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்வதற்கான சந்தர்ப்பம் கடந்த ஜுன் 20 ஆம் திகதி முதல் வழங்கப்பட்டுள்ளது.

அப்போது வெளியிட்ட சுற்றுநிருபத்திற்கமைய அந்தக் காலப்பகுதி ஜுலை 24 ஆம் திகதியுடன் நிறைவடையும் நிலையில், அந்தக் கால அளவை மேலும் ஒருமாதத்தால் நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அத்துடன் அலுவலகங்களுக்கு தேவையை அடிப்படையாகக் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களை அழைக்கவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.