ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றுக்குள் நுழைந்து அங்கிருந்த சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்கள் தொடர்பில் சீஐடியினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி கடந்த 9 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அங்கு சென்றவர்கள் தொடர்பில் சீசீடிவி பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக கடந்த 9 ஆம் திகதி போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகத்தை கைப்பற்றினர்.
இதன்போது அங்கிருந்த பெறுமதியான சொத்துக்களுக்கு சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இந்தக் காலப்பகுதியில் அங்கு வருகை தந்தவர்கள் குறித்து அத்துமீறிய பிரவேசம் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் சீஐடியினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதற்கமைய புலனாய்வு அமைப்புகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் அந்த நபர்களை கைது செய்வதற்கான விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.