பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் பல ஒன்றிணைந்து புதிய கூட்டணியொன்றை அமைப்பதற்கு கலந்துரையாடியுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் மற்றும் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்கும் கட்சிகள் இவ்வாறு கூட்டணியை அமைப்பதற்கு தயாராகியுள்ளன.
இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குழுவொன்று எதிர்க்கட்சி பக்கம் வருவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜீ.எல். பீரிஸ் மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோரின் தலைமையில் அந்தக் குழு செயற்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.