November 18, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இடைக்கால அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்றது!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றது.

பிற்பகல் 1 மணியளவில் பிரதமர் அலுவலகத்தில் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது 18 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இவர்களில் பெரும்பான்மையானோர் இதற்கு முன்னர் இருந்த அமைச்சரவையில் பதவி வகித்தவர்களே ஆகும்.

அமைச்சர்களின் விபரங்கள்

தினேஸ் குணவர்தன (பிரதமர்) – பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு

டக்ளஸ் தேவானந்தா – மீன்பிடி அமைச்சர்

சுசில் பிரேமஜயந்த் – கல்வி அமைச்சர்

பந்துல குணவர்தன – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்

கெஹலிய ரம்புக்வெல்ல – சுகாதார மற்றும் நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர்ர்

மஹிந்த அமரவீர – விவசாயம், வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர்

விஜயதாச ராஜபக்ஷ – நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்

ஹரின் பெர்னாண்டோ – சுற்றுலா மற்றும் காணி அமைச்சர்

ரமேஷ் பத்திரன – கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்

பிரசன்ன ரணதுங்க – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்

அலி சப்ரி – வௌிவிவகார அமைச்சர்

விதுர விக்கிரமநாயக்க – புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்

கஞ்சன விஜயசேகர – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்

நசீர் அஹமட் – சுற்றாடல் அமைச்சர்

ரொஷான் ரணசிங்க – நீர்ப்பாசன மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்

மனுஷ நாணயக்கார – தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்

டிரான் அலஸ் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு

நளின் பெர்னாண்டோ – வர்த்தகம், வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர்