November 18, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காலிமுகத்திடல் சம்பவம் தொடர்பில் ஐநா விசேட அவதானம்!

கொழும்பு, காலிமுகத்திடலில் போராட்டக்காரர்கள் படையினரால் தாக்குதல் நடத்தி விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐநா விசேட அவதானம் செலுத்தியுள்ளது என்று ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரிதிநிதியான ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் போராட்ட உரிமையை ஒடுக்குவதற்கு முயற்சிப்பதன் ஊடாக நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்தீரமின்மை மேலும் உக்கிரமடையும் நிலைமையே ஏற்படும் என்று ஐநா வதிவிடப் பிரதிநிதி தனது டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் மக்களின் ஆலோசனைகளை பெற்று அமைதியான முறையில் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு முன்னால் செல்ல வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.