இலங்கையின் புதிய பிரதமராக தினேஸ் குணவர்தன பதவியேற்றுள்ளார்.
இன்று முற்பகல் 10.20 மணியளவில் அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பிரதமராக பதவியேற்றார்.
கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்தப் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது.
ரணில் விக்கிரமசிங்கவின் பாடசாலை தோழனான தினேஸ் குணவர்தன, 1983 ஆம் ஆண்டில் அரசியலில் காலடி வைத்துள்ளார்.
அவர் 1983ஆம் ஆண்டு முதல்முறையாக பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகினார்.
அதன்பின்னர் 1994 தேர்தலில் அவர் தோல்வி அடைந்து இருந்த போதிலும், 2000 முதல் தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார் என்பதுடன் கடந்த காலங்களில் ராஜபக்ஷ அரசாங்கத்தில் முக்கிய அமைச்சுப் பதவிகளையும் வகித்து வந்தார்.