கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இருந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்து படையினரால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை அந்தப் பகுதிக்கு சென்ற இராணுவம், பொலிஸ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பாதுகாப்பு படையினர் அங்கிருந்தவர்களை விரட்டியடித்து, குறித்தப் பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இதன்போது போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் காயமடைந்த சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை போராட்டக்களத்தில் இருந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் அந்தப் பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பிபிசி உலகச் சேவை ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், அவரின் கைத்தொலைபேசியில் இருந்த வீடியோ அழிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
காலிமுகத்திடலில் நடைபெற்ற குறித்த சம்பவத்தை பல்வேறு தரப்பினரும் கண்டித்துள்ளனர்.