ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்படும் அனைத்து செய்திகளும் சபாநாயகர் ஊடாகவே வெளியிடப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனால் சபாநாயகர் வெளியிடும் அறிவிப்புகளை மாத்திரம் ஜனாதிபதியினால் வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளாகக் கருத வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று விசேட ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.