ஜனாதிபதி பதவி விலகிய பின்னர் யாரை பதில் ஜனாதிபதியாக நியமிப்பது என்றும், சர்வ கட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டால் யாரை பிரதமராக நியமிப்பது என்றும் இதுவரையில் கட்சிகளுக்கிடையே இணக்கப்பாடுகள் ஏற்படவில்லை.
சனிக்கிழமை கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பதில் ஜனாதிபதியாக சபாநாயகரை தற்காலிகமாக நியமிக்க கட்சிகளிடையே இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்ட போதும், ரணில் விக்கிரமசிங்க இதுவரையில் அதற்கு இணங்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சர்வ கட்சி அரசாங்கத்தில் பிரதமர் பதவிக்கு பல்வேறு நபர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான நிலைமையில் இன்று பிற்பகல் சபாநாயகர் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் தலைவரும் கூடி கலந்துரையாடவுள்ளனர்.
இதன்போது இந்த நெருக்கடிகளை தீர்ப்பது தொடர்பில் கட்சிகளுக்கிடையே பொது இணக்கப்பாடு எட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.