தான் முன்னர் அறிவித்தவாறு பதவி விலகுவேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறியுள்ளார்.
பிரதமர் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
13 ஆம் திகதி தான் பதவி விலகுவேன் என்று தன்னிடம் ஜனாதிபதி அறிவித்துள்ளதாக சனிக்கிழமை இரவு சபாநாயகர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகியதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரையில் தாம் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.