நாட்டில் ஜனாதிபதியும் பிரதமரும் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இதனால் மாற்றுப் பிரதமராக எதிர்க்கட்சித் தலைவரே இருக்கின்றார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு நாட்டிலும் எதிர்க்கட்சித் தலைவரையே மாற்றுப் பிரதமராக கருதுவார்கள் என்றும், இதனாலேயே இராஜதந்திரிகள் வரும் போது எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்திக்கின்றனர் எனவும் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி தற்போது இலங்கையின் மாற்றுப் பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவே இருக்கின்றார் என்றும் அவருடன் இணைந்து பயணிக்க அனைவரும் தயாராக வேண்டும் என்றும் இது தொடர்பான நடவடிக்கைகளை பாராளுமன்றம் முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.