ஜனாதிபதிக்கு எதிராக நேற்று நடந்த மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் போது போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரிமாளிகையை பார்வையிட பெருந்திரளமான மக்கள் அங்கு செல்கின்றனர்.
இதனால் அங்கு பெரும் சன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு தரப்பினரின் தடைகளையும் மீறி போராட்டக் காரர்கள் ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரிமாளிகையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனை தொடர்ந்து அந்த மாளிகைகளில் போராட்டக்காரர்கள் இரவு முழுவதும் தங்கியிருந்தனர்.
இந்நிலையில் இன்றைய தினம் காலை முதல் அவற்றை பார்வையிட பெருந்திரளான மக்கள் அங்கு செல்கின்றனர். அவர்கள் உள்ளே சென்று சுற்றிபார்ப்பதுடன், புகைப்படங்களையும் எடுத்துக்கொள்கின்றனர்.