November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமைச்சர் தம்மிக பெரேரா பதவி விலகினார்!

தான் அமைச்சுப் பதவியில் இருந்து பதவி விலகியுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்து ஜனாதிபதி பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ள நிலையிலேயே தம்மிக்க பெரேரா இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இவர், பஸில் ராஜபக்‌ஷ பதவி விலகிய பின்னர் எம்.பியாக பதவியேற்றார். இதனை தொடர்ந்து இவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டது. அந்த அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதாக அவர் தற்போது அறிவித்துள்ளார்.

இதேவேளை பந்துல குணவர்தன, ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோரும் அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.

அதேபோன்று உரக் கப்பல் இலங்கை வந்ததும் அதனை பொறுப்பேற்ற பின்னர் தானும் பதவி விலகவுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர அறிவித்துள்ளார்.