சமையல் எரிவாயு கப்பலொன்று இன்றைய தினத்தில் இலங்கை வரவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அந்தக் கப்பலில் 3,700 மெட்ரிக் டொன் எரிவாயு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி அந்தக் கப்பல் நாட்டை வந்தடைந்த பின்னர் நாளை முதல் எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்க லிட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதேவேளை மேலும் 3,740 மெட்ரின் டொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் ஒன்றும் 3,200 மெட்ரின் டொன் எரிவாயுவை ஏற்றிய இன்னுமொரு கப்பலும் எதிர்வரும் தினங்களில் நாட்டுக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.