பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளுப்பிட்டியில் உள்ள இல்லத்திற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது பிரதமரின் இல்லத்திற்குள் நுழைந்த குழுவொன்று அங்கு தீ வைத்துள்ளது.
அங்கிருந்த பெருமளவாள சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இல்லம் பிரதமரால் மரபுரிமையாக பெறப்பட்டு பழைய கட்டிடக்கலைப்படி நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இங்கு மிகப்பெரிய நூலகம் அமைந்திருந்தது. இங்கு பொருட்களை விட அதிகளவில் நூல்களே காணப்பட்டதாக கூறப்படுகின்றது.
இதேவேளை தனக்குப் பின்னர் கொழும்பு றோயல் கல்லூரிக்கு இந்த வீட்டை நன்கொடையாக வழங்குவதற்கான கடைசி உயிலையும் பிரதமர் வெளியிட்டுள்ளார்.