ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுவதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அறிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் 13 ஆம் திகதி தான் பதவி விலகுவதாக அவர் அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தத் தீர்மானத்தை சபாநாயகர், ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள ஜனாதிபதி பதவி விலக முடிவுச் செய்துள்ளதாக அறிவித்துள்ளதாக சபாநாயகர் கூறியுள்ளார்.