சபாநாயர் தலைமையில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதியுடன் பிரதமரும் பதவி விலக வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் சில கட்சிகள் நேரடியாக கலந்துகொண்டதுடன், சில கட்சிகள் வீடியோ தொழில்நுட்பம் ஊடாக கலந்துகொண்டுள்ளன.
இதன்போது, அரசியலமைப்புக்கு அமைவாக ஜனாதிபதி பதவி விலகினால் பதில் ஜனாதிபதியாக தற்போதைய சபாநாயகர் அபேவர்தன பதவியேற்க வேண்டும் என்று யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை பாராளுமன்றத்தை கூட்டி சர்வ கட்சி அரசாங்கத்திற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் பிரதமரும் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி தான் பதவி விலகத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அதற்கு முன்னர் சர்வ கட்சி அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.