January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் கடல் நீர் உட்புகுந்தமை தொடர்பில் ஆய்வு

யாழில் கடல் நீர் உட்புகுந்தமை தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு உண்மையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று யாழ் அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

யாழ் கல்லுண்டாய், ஊர்காவற்துறை, குருநகர், நாவாந்துறை பிரதேசத்தில் கடல் நீர் உட்புகுந்துள்ளதாக மாவட்ட செயலகத்திற்கு தகவல் கிடைத்திருந்தது.

அதனை உடனடியாக அனர்த்த முகாமைத்துவ பிரிவினருக்கு அறிவித்திருக்கிறோம் அதேபோல்  நேரடியாக அப்பகுதிக்கு சென்று அந்தவிடயம் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளதாக  அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

கல்லுண்டாய் பகுதி உட்பட யாழ் மாவட்டகரையோர பகுதிகள் சிலவற்றில் கடல் நீர் உட்புகுந்துள்ளது. ஏற்கனவே இருக்கின்ற உவர்நீர் கட்டுகள் சேதமடைந்ததன் காரணமாகவும் நீர் உட்புகுந்திருந்திருக்கலாம்.

ஆகவே இந்த விடயம் பற்றி அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு தெரியப்படுத்தியுள்ளோம் இது பற்றி தொடர்ச்சியாக ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் இவ்வாறான சம்பவம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டத்தில் பரவலாக உணரப்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு விரிவாக ஆராய்ந்து வருவதாகவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.