November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”ஜனாதிபதி விலக வேண்டும்”: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு!

போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பதவி விலக வேண்டும் என்று கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்தத் தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அறிவிப்பதற்கும் கட்சித் தலைவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

இன்று மாலை 4 மணிக்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

இதில் கலந்துகொண்டிருந்த கட்சித் தலைவர்கள், ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோருவதற்கு முடிவெடுத்துள்ளனர்.

இதேவேளை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தத் தீர்மானத்திற்கும் தான் மதிப்பளிப்பேன் என்று ஜனாதிபதி ஏற்கனவே பிரதமரிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.