November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதியின் விசேட அறிவித்தல்!

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும் தலைசாய்க்க தான் தயார் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்ட அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே ஜனாதிபதி இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

இந்தக் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதற்கான அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் தாம் கலந்துகொள்ள மாட்டோம் என்று சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.