எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திடீர் நோய்வாய்ப்பட்ட நிலையில் அவர் இன்று முற்பகல் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சஜித் பிரேமதாஸவுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கான சிகிச்சைகள் வழங்கப்படுவதாகவும் மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.