தற்போதைய நிலைமையில் பாராளுமன்றத்தை அவசரமாக கூட்ட நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபாநாயகரை கேட்டுக்கொண்டுள்ளார்.
அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்து பிரதமர் இந்த கோரிக்கையை விடுத்தள்ளார்.
இதேவேளை தற்போதைய சூழ்நிலை குறித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள கட்சி தலைவர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவசர அழைப்பு ஒன்றை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஜனாதிபதிக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து, போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகத்தை கைப்பற்றியுள்ள நிலையிலேயே பிரதமர் இந்த அழைப்பை மேற்கொண்டுள்ளார்.