Photo: Social media
கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பன போராட்டக் காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆயிரக் கணக்கான போராட்டாக் காரர்கள் வந்தமையினால் அதற்கு ஈடுகொடுக்க முடியாது பாதுகாப்பு தரப்பினர் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து பிரதான வாயில்களை உடைத்துக்கொண்டு ஜனாதிபதி மாளிகை மற்றும் செயலகத்திற்குள் சென்ற போராட்டக்காரர்கள் அவற்றை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இராணுவம் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸார் பெருமளவில் குவிக்கப்பட்டு நேற்று இரவு முதல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்த போதும், அதனையும் மீறி போராட்டக்காரர்கள் குவிந்துள்ளனர்.
இதன்படி தற்போது ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகை என்பன இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக போராட்டக்காரர்கள் வசமாகியுள்ளது.