கொழும்பு கோட்டையில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள சதாம் வீதிப் பகுதியில் பதற்றமான நிலைமை நிலவி வருகின்றது.
அந்தப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதி மாளிகை நோக்கிச் செல்ல முற்பட்ட போது இராணுவத்தினரும், பொலிஸாரும் அவர்கள் மீது கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதனால் பாதுகாப்புத் தரப்பினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் பெருந்திரளானவர்கள் கூடி வருவதால் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.