கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தின் பொலிஸ் பிரிவுகள் பலவற்றில் நேற்று இரவு முதல் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று காலை 8 மணி முதல் அந்த ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
நேற்று இரவு 9 ஆம் திகதி முதல் கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி ஆகிய பிரதேசங்களிலும் மற்றும் நீர்கொழும்பு, களனி, நுகேகொட, கல்கிசை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.
மறு அறிவித்தல் வரையில் ஊரடங்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.
எனினும் இதன் சட்டப்பூர்வ தன்மை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கேள்வியெழுப்பிய நிலையில், பொலிஸ் தலைமையகம் அதனை நீக்கிக்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இன்று கொழும்பில் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்படவிருந்த நிலையிலேயே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.