கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தில் பொலிஸ் பிரிவுகள் பலவற்றில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஜுலை 8 ஆம் திகதி இரவு 9 ஆம் திகதி முதல் கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி ஆகிய பிரதேசங்களிலும் மற்றும் நீர்கொழும்பு, களனி, நுகேகொட, கல்கிசை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்கு அமுலாகிறது.
மறு அறிவித்தல் வரையில் ஊரடங்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் அனைவரும் வீடுகளில் இருக்க வேண்டும் என்பதுடன், வீதிகளில் சுற்றித் திரிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நாளை கொழும்பில் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்படவிருந்த நிலையிலேயே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.