பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் எதிர்ப்புகள் மேலோங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் அவரை பிரதமர் பதவியில் இருந்து விலகச் செய்யுமாறு அந்தக் கட்சியினர் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான நிலைமையில் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க விலகினால், அந்தப் பதவிக்கு பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பியான அமைச்சர் தம்மிக்க பெரேராவை பரிந்துரைக்க பஸில் தரப்பினர் திட்டமிட்டு வருவதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை ஜனாதிபதி பதவி விலகுவராக இருந்தால் பதில் ஜனாதிபதியாக தம்மிக்க பெரேராவை நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதன்படி பதில் ஜனாதிபதியாக தம்மிக்க பெரேராவை நியமித்து ஜனாதிபதித் தேர்தலில் அவரையே மொட்டுக் கட்சியின் பொது வேட்பாளராக களமிறக்க கட்சிக்குள் ஆராயப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.